அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தபடி உள்ளது. மிசிசிபியை சேர்ந்த ரோஜர்வில்சன் என்ற செனட் உறுப்பினருக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தது. அதில் ரெசின் என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருந்தது.அதேபோன்ற கடிதம் அதிபர் ஒபாமாவுக்கும் மிசிசிபியை சேர்ந்த நீதிபதி ஒருவருக்கும் வந்தது. இவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதை யார் அனுப்பியது என்று விசாரித்ததில் முக்கிய தகவல் கிடைத்தன.
மிசிசிபி அருகே உள்ள கோரிந்த் என்ற இடத்தில் இருந்து கடிதம் அனுப்பபட்டடிருப்பது தெரிய வந்தது. அதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் யார் என்ற விபரத்தையும், மற்ற தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். இது தீவிரவாத செயலாக இருக்குமா? என்பது பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை.
மாலைமலர்
0 comments :
Post a Comment