தாய் நாட்டிற்கு எதிராக செயற்படுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பனாகொடை இராணுவ முகாமில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் 30 வருடகால யுத்தம் காணப்பட்ட போதிலும் நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான பல விடயங்கள் வெளிநாடுகளிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி கூறினார்.
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்த விவகாரம் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, குறித்த துறைகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பைப் போன்று தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் யுகமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
அவ்வாறான யுகம் உருவாகும் போது நாடு முழு சுதந்திரம் பெறும் எனவும் அதற்கு எதிராக எவரும் செயற்பட இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.1st
.jpg)
0 comments :
Post a Comment