கல்முனை மாநகரசபை ஆளும்தரப்பினரின் நடவடிக்கைகள் வெட்கத்தனமானது-நபார்

                                                                
 (கல்முனை நிருபர்)
ல்முனை மாநகர சபையின் ஆளும் தரப்பு குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட தகராறை
வைத்துக்கொண்டு ஊடகங்களுக்கு தவறான கருத்துக்களை வெளிட்டமை
வருந்தத்தக்கதும், முதல்வர் ஸிராஸ் மீராசாஹிபிற்கு கழங்கத்தை
ஏற்படுத்தும் செயற்பாடுமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை மாநகசபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (29) நடைபெற்றபோது சபையின்
ஆளும் தரப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் வருகை தராமையை
வைத்துக்கொண்டு, உறுப்பினர்கள் முதல்வரின் நடவடிக்கையை கண்டித்து
சபையிலிருந்து வெளிநடப்பு என்று கூறி விடயத்தை பூதாகரமாக்கி
பத்திரிகைகள், இணையத்தளங்கள் ஊடாக உண்மைக்குப் புறம்பான செய்திகள்
வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விடயத்திற்காக எதிர்தரப்பு உறுப்பினர் என்ற வகையில் வெட்கப்படுவதாக
குறிப்பிட்ட நபார் இதுவிடயமாக மேலும் கருத்து வெளியிடும்போது,

கல்முனை மாநகர சபையினை ஆளுகின்ற ஒரு கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஆகும். இக்கட்சி கல்முனைப் பிரதேச மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு
கட்சியாகும். முஸ்லிம் காங்கிரசின் கல்முனை மாநகர சபை கட்சி
உறுப்பினர்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இந்த முரண்பாடு கட்சியின் எதிர்கால
அரசியல் நடவடிக்கைகளையும், மக்கள் மத்தியில் இருக்கின்ற அபிமானத்தையும்
இழக்கின்ற நிலைக்கு கொண்டுசென்று விடலாம்.

உண்மையில் சபை வெளிநடப்பு என்பது குறித்த நபர்கள் அல்லது குழு குறித்த
தினம் சபைக்கு சமூகமளித்து சபையை விட்டு வெளியேறி வெளிநடப்பு செய்வதுதான்
வெளிநடப்பாகும். ஆனால் கல்முனை மாநகர சபையின் 6 உறுப்பினர்கள் சபைக்கு
வரவில்லை. அதில் சுகயீனம் காரணமாக ஏ.ஏ.பஷீர் என்ற உறுப்பினர் உத்தியோக
பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நபை வெளிநடப்பு என்று
குறிப்பிடுவது தவறாகும். சபைக்கு வந்து சபையின் நடவடிக்கைக்கு எதிராக
வெளியேறியிருந்தால் அது ஒரு வெளிநடப்பாகும். என்பதை புரிந்துகொள்ள
வேண்டும்.

இந்த பிரச்சினைகளுக்கு அப்பால் நான் நினைக்கின்றேன் கல்முனை மாநகர
முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் அவர்கள் சிறப்பாக தனது பணியைச் செய்து
வருகிறார். இந்நிலையில் கட்சி வேறுபாடுகளக்கப்பால் எல்லோருமாக அரவணைத்து
நடுநிலையாக செயற்பட்டுவரும் முதல்வருக்கும் இச்சபைக்கும் எதிராக
கழங்கத்தை ஏற்படுத்த முனைவது வேதனையளிக்கின்றது.

உண்மையில் முதல்வர் பதவியேற்பின்போது 2 வருடகாலம் தற்போதைய
முதல்வருக்கும், அடுத்த 2 வருட பதவிக்காலம் தற்போதைய பிரதி முதல்வர்
நிஸாம் காரியப்பருக்கும் வழங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கைகள்
விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அந்தவகையில் ஸிராஸ் மீராசாஹிபின்
பதவிக்காலம் எதிர்வரும் 2013 ஒக்டோபர் மாதமளவில் முடிவடைவதாக
குறிப்பிடப்படுகிறது.

இந்த விடயத்தை அமுல்படுத்தி புதிய முதல்வரை கொண்டு வருவதற்கான
முஸ்தீபுகளின் ஒரு வடிவமே இந்த ஆளும்தரப்பு உறுப்பினர்களின் முரண்பாட்டு
நடவடிக்கைகளுக்கு காரணமாகும் என நாங்கள் கருதுகின்றோம்.

எது எவ்வாறு இருந்தாலும் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றவதற்காக பதவிக்கு
வந்த நாம் அதனை மறந்து வேறு கோணத்தில் பயணிக்காமல் மக்கள் நலனை கருத்தில்
கொண்டு செயலாற்ற வருமாறும், சிறப்பாக செயற்பட்டு எண்ணிறைந்த சேவைகளை
செய்து வருவதற்கு எமது பிரதேச மக்களே சான்றாகும். ஆகவேதான் முதல்வருக்கு
எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு ஒற்றுமையாக செயலாற்ற ஒன்றுபடுமாறும்
அழைப்பு விடுக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :