கிழக்கு மாகாணத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஊடகத் தொழிற் சங்கவாதியுமான கலாபுசணம் மீரா எஸ்.இஸ்ஸதீன் நாளை இடம்பெறவுள்ள தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(நுஜா) மே தின விழாவில் பொன்னாடை போர்த்தி பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பங்களிப்புச் செய்து வரும் மீரா எஸ்.இஸ்ஸதீன் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் சாதனை செய்தியாளராகவும் அகில இலங்கை ரீதியாக இனம் காணப்பட்டுள்ளார்.
தனக்கென்று ஒரு கொள்கையை அமைத்து செயற்பட்டு வரும் இவர் ஊடகத்துறைக்குக் கிடைத்த வரப்பிரசாதகமாகும். அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக பல ஆண்டு காலமாக செயற்பட்டு வரும் மீரா பல விழாக்களை நடத்தி வெற்றி கண்டுள்ளது மட்டுமல்லாமல் கூடுதலான ஊடகவியலாளர்களைப் பாராட்டிக் கௌரவித்துள்ளமை விசேட அம்சமாகும்.
இளம் ஊடகவியலாளர்களை தட்டிக் கொடுத்து அவா்களை வழிப்படுத்துவதில் மீராக்கு நிகர் மீராதான். ஊடகவியலாளர்களுக்கு எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் களத்தில் நின்று குரல் கொடுப்பது மட்டுமல்லாது அவா்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதையும் இந்த சந்தா்ப்பத்தில் ஞாபகப்படுத்திப் பார்ப்பது சாலப் பொருத்தமாக இருக்கும்.
ஆளுக்கால் போட்டி என்ற மனநிலைக்கு அப்பால் தனது ஊடகப் பயணத்தை வெற்றி கரமாக முன்னடுத்து வரும் மீரா எஸ். இஸ்ஸதீன் ஊடகத்துறையில் இன்னும் பல சாதனைக்கு சொந்தக்காரராக மாறவேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பமாகும்.
ஆற்றலும்,அனுபவமும் கொண்ட மீரா எஸ்.இஸ்ஸதீன் ஊடகத்துறையின் காவலன் என்று தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் பாராட்டி மகிழ்கின்றது.
0 comments :
Post a Comment