அமெரிக்க தூதுவர் முஸ்லிம் பிரதி நிதிகளை சந்தித்தது சட்டத்தை மீறிய செயல்-GL


தூதுவர்களுக்காக ஒழுக்க நெறிகளை மீறி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சீசோன், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் அமைப்புகளின் 25 பிரதிநிதிகளை கொழும்பு அழைத்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று globaltamilnews என்ற இணையத்தளம்   குறிப்பிட்டுள்ளது .

இந்த முஸ்லிம் பிரதிநிதிகளை, அமெரிக்க தூதுவர் சந்திக்கவிருந்தமை தொடர்பான தகவல்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் கிடைத்திருக்கவில்லை. முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய, தூதுவர்  கிழக்கில் முஸ்லிம்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இடையிலான நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தை மூலம் தூதுவர், வெளிநாட்டு தூதுவர்கள் தொடர்பான 1961 ஆம் ஆண்டு வியன்னா இணக்கப்பாட்டை மீறியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது .

இதற்கு முன்னர், அமெரிக்க தூதரகம், மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்திடம் கருத்துக்களை கேட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :