நீதி அமைச்சர் ஹக்கீமும், வியட்நாமிய பௌத்த பிக்குவும் சந்திப்பு



ற்பொழுது வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அங்கு வின்ஹ் புங் பிராந்தியத்தில் உள்ள பௌத்த மடாலயத்தில் அதன் பிரதம பிக்கு டிச் கெயின் நகுயெட் தேரரை சந்தித்து உரையாடினார்.
பிரதம பிக்கு வியட்நாமின் பௌத்தத்தின் வரலாறு பற்றிக் கூறினார்.

இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, இலங்கைக்கு தமது புதல்வர் அரஹத் மஹிந்த ஊடாக பௌத்த சாசனத்தை அறிமுகப்படுத்திய அதே காலகட்டத்தில் ஒரு பௌத்த தூதுக்குழுவை வியட்நாமுக்கும் அனுப்பி வைத்ததாக அவர் கூறினார்.

வரலாற்று ஆதாரங்களின் படி, குலபாஉர் ராஷிதீன்களில் மூன்றாமவரான உதுமான் இப்னு அப்வான் (ரலி) கலீபாவாக பதவி வகித்த காலத்தில், முஸ்லிம் தூதுவர் ஒருவரை வியட்நாமுக்கு அனுப்பி வைத்ததாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

வியட்நாமின் சில பிராந்தியங்களில் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிப்பதோடு, அழகிய பள்ளிவாசல்களும் அங்கு அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

பிரதம பிக்கு டிச் கெயின் நகுயெட் தேரர் அமைச்சர் ஹக்கீமுக்கு நினைவுச் சின்னமொன்றையும் அன்பளிப்புச் செய்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :