தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுவொன்று தொலைபேசி மூலம் பலரை மிரட்டி பணம் பறித்து வரும் சம்பவங்கள் குறித்து அதிக முறைப்பாடு கிடைத்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.பொலிஸார் என கூறி தொலைபேசி அழைப்பை எடுக்கும் நபர்கள் ´நீங்கள் புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பது எங்களுக்கு தெரியும். உங்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்போம். அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்க வேண்டுமாயின் பணம் வேண்டும்´ என ஒரு குழு மிரட்டி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் இந்த மிரட்டலுக்கு அஞ்சும் நபர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கும் முடியாது போவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
எனவே பொலிஸார் எனக் கூறிக் கொண்டோ வேறு வழிகளிலோ அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு அழைத்து தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
011-2444480 - 011-2444481 - 011-2444482
0 comments :
Post a Comment