ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் கெயிலின் அதிரடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றி பெற்றது.6வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 50 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்து கொல்கட்டாவை அனாயசமாக வெல்ல வழி வகுத்தார்.
டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் ·பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் கல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
இதனை எதிர்த்து களமிறங்கிய பெங்களூர் அணியின் கெய்லும், கோலியும் கல்கத்தாவின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடித் திருவிழா நடத்தினார் கெய்ல். 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 பெளண்டரிகளுடன் 85 ரன்களைக் குவித்தார்.
இறுதியில் 17.3 ஓவர்களில் கொல்கட்டாவின் கதையை முடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
0 comments :
Post a Comment