கல்முனைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி.


 (எஸ்.அஷ்ரப்கான் )

தைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று திங்கட்கிழமை
(22) கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இளைஞர் சேவை
அதிகாரி எம். முபாறக் அலி தலைமையில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் கல்முனை இளைஞர் கழக அணியை எதிர்த்து மருதமுனை
யுனிவர்ஸ் இளைஞர் கழக அணி விளையாடியது. இந்த போட்டி இறுதிவரை மிகவும்
விறுவிறுப்பாக அமைந்த நிலையில், எந்த அணியும் கோல் புகுத்தாததால்
இறுதியில் தண்டனை உதை மூலம் 05-04 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கல்முனை
இளைஞர்கழக அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவானது.

இச்சுற்றுப்போட்டிகளின் கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட சம்பியனாகவும்
கல்முனை இளைஞர்கழக அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப்
சம்சுதீனும், கௌரவ அதிதியாக சாய்ந்தமருது தேசிய இளைஞர்  நிலைய
பொறுப்பதிகாரி எஸ்.எல்.ஏ. லத்தீப் மற்றும் கல்முனை தேசிய இளைஞர்
கழகத்தின் அமைப்பாளர் ஏ. டப்ளியு. எம். ஜெஸ்மின், கல்முனை பிரதேச செயலக
விளையாட்டு அதிகாரி ஏ.எம்.எம்.றஸீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இளைஞர் கழகங்க விளையாட்டுப்போட்டிகளின் மெய்வல்லுனர் போட்டி எதிர்வரும்
மே மாதம் 10 ம் திகதிக்கு முன் நடாத்தப்படுமென இளைஞர் சேவை அதிகாரி எம்.
முபாறக் அலி தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :