நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் தகுதி சுற்றுப் போட்டிகளாக பிளே ஆப் சுற்று போட்டிகள் சென்னையில் இருந்து டெல்லிக்கு இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளன.ஈழத் தமிழர் பிரச்சனையால் சென்னையில் சிங்கள வீரர்கள் விளையாட தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 22-ந் திகதி சென்னையில் ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் தமிழக அரசு தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிளே ஆப் சுற்றுப் போட்டிகளை டெல்லிக்கு இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது.
டெல்லியில் நேர்ரு செய்தியாளர்களிடம் பேசிய ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா,
தகுதி சுற்றுப் போட்டிகள் டெல்லிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இந்தப் போட்டிகளை பெங்களூரில் நடத்த பரிசீலிக்கப்பட்டது.
ஆனால் டெல்லியில் நடத்தவே பெரும்பான்மை ஆதரவு இருந்தது என்றார் அவர்.
அதாவது சென்னை சேப்பாக்கத்தில் மே 21ஆம் திகதி நடத்தப்பட இருந்த முதலாவது குவாலிஃபையர் போட்டியும் மறுநாள் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியும் டெல்லி கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது.
0 comments :
Post a Comment