இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விரும்பத்தகாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டத்தினை லண்டனை தளமாக கொண்டுள்ள பெண்கள் அமைப்பொன்று ஏற்பாடு செய்து நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசை கண்டிக்கும் வாசகங்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக்கோரும் வசனங்களும் ஆரப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. எனினும் குறித்த ஆரப்பாட்டத்தில் இலங்கையை சேர்ந்த எந்தவொரு குழுவும் பங்குபற்றியதாகவோ அதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்டதாகவோ உறுதிப்படுத்த முடியவில்லை. எவ்வாறாயினும் குறித்த ஆரப்பாட்டம் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கு அண்மைக்காலமாக இழைக்கப்பட்டுவரும் விரும்பத்தகாத நடவடிக்கைகளை உலகறியச்செய்யும் நடவடிக்கையாக குறித்த பெண்கள் அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக லண்டனில் ஆர்பாட்டம்.

0 comments :
Post a Comment