உதயன் பத்திரிகை யாழ். பிரதான அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தீவைப்பு -படங்கள்


தயன் பத்திரிகை யாழ். பிரதான அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அச்சு இயந்திரப் பகுதியும் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.

கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பிரதான அலுவலகத்தில் வழமை போல் இன்றும் பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்த வேளை அதிகாலை 4.45 மணியளவில் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணியாளர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி அச்சுக் கூடப்பகுதிக்குள் நுழைந்தனர்.

அங்குள்ள அச்சு இயந்திரங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயாகத்தினை மேற்கொண்டவர்கள் தாங்கள் கொண்டு வந்த பெற்றோலை ஊற்றி அச்சு இயந்திரங்களையும் , அச்சுத்தாள்களையும் கொளுத்திவிட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கியுடன் உள் நுழைந்த நபர்கள் அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி வெளியில் விரட்டிவிட்டு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பின் இயந்திரம் மற்றும் பத்திரிகைக்கு தீ வைத்து எரித்துள்ளதாக உதயன் பத்திரிகை ஆசிரியர் ரி.பிரேமானந்த் இணையத்துக்கு தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி அலுவலகம் தாக்கப்பட்ட பின் யாழ், அலுவலகத்திற்கு பொலிஸ் மா அதிபரிடம் பாதுகாப்பு கோரியிருந்ததாகவும் ஆனால் அவர் அதனை இதுவரை வழங்கியிருக்கவில்லை எனவும் உதயன் பத்திரிகையின் உரிமையாளர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.AD












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :