கல்முனை செறோ ஸ்ரீலங்கா அமைப்பின் பத்தாண்டு நிறைவும், அங்கத்தவர்கள் கௌரவிப்பும்.



-றிஸ்கான் முகம்மட்- 


ல்முனை செறோ ஸ்ரீலங்கா அமைப்பின் பத்தாண்டு நிறைவும், அங்கத்தவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி றினோஸ் ஹனீபா தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் இணைப்பாளர் ஏ.வீ.தாவூத் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் சாய்ந்தமருதுத பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபுள்யூ.ஏ.ஹபார் உள்ளிட்ட உயரதிகாரிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அமைச்சர் அதாவுல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் செறோ அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :