ஹஜ் குழுவின் இணைத்தலைவர் பதவியில் இருந்து என்னை யாராலும் நிறுத்த முடியாது -காதர்


ஹஜ் விண்ணப்பதாரிகளிடமிருந்து பதிவுக்கட்டணமாக பெறப்படும் முற்பண வங்கி வைப்பு 25 ஆயிரம் ரூபா நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. என ஹஜ் குழுவின் இணைத்தலைவரும் பிரதியமைச்சருமான ஏ.ஆர்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.

சவூதி அரேபிய அரசு இலங்கை முஸ்லிம்களுக்காக வருடாந்தம் வழங்கும் இலவச விஸாக்களை (visa ) இவ்வருடம் விற்பனை செய்யக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் 'சகோதர இணையத்துக்கு
அவர் தெரிவித்தார்.

கடந்தவருடம் போன்று ஹஜ் குழுவின் இணைத்தலைவர் பதவியிலிருந்து என்னை தவிர்க்க முடியாது. நீக்கவும் முடியாது. இந்த அதிகாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை தவிர வேறு யாருக்கும் கிடையாது. என்றார்.

இது தொடர்பில் ஹஜ் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசியிடம் இது தொடர்பில் கேட்ட போது பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

ஹஜ் ஏற்பாடுகளை கவனிக்கும் பணி புனிதமானது. பொது பல சேனா எமது சமூகத்துக்கு எதிராக சவால்களை ஏற்படுத்திவரும் நிலையில் எமது கடமைகளை கருத்து வேறுபாடுகள் இன்றி நிறைவேற்ற வேண்டும். எமக்குள் நாமே முரண்பட்டுக்கொள்வதால்  சமூகமே பாதிப்புக்குள்ளாகும். ஒற்றுமையே உயர்ந்த பண்பாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :