மற்றவர்களின் இணையத்தளங்களை முடக்கியவருக்கு விளக்க மறியல்.


ற்றவர்களின் இணையத்தளங்களுள் நுழைந்து அவற்றை முடக்கும் மென்பொருட்களையும் அறிவுறுத்தல்களையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டவரை கொழும்பு பிரதான நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மே மாதம் 02 ஆம் திகதி வரையே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சிங்கபுலி உத்தரவிட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினர் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு செய்த முறைப்பாட்டினை அடுத்தே கண்டி தர்மசோக மாவத்
தையில் வாழும் கயன் உஷந்த சில்வா என்ற இந்த சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபரின் வாடிக்கையாளர்கள் இளைஞர்கள் எனவும் இவர்களுடைய செயற்பாடுகள் தேசிய பாதுக்காப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :