பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வீஸ் முஷர்ரபுக்கு தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் நீதி மன்றம் ஆயுட்கால தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட முதல் ஆயுட்கால தடை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெனாசீர் பூட்டோ கொலை, நீதிபதிகளை கைது செய்து சிறையில் அடைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ரப், கைது நடவடிக்கையை தவிர்க்க வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். பின்னர் அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்றார்.
இதற்காக கடந்த மாதம் நாடு திரும்பிய அவருக்கு கடும் சோதனை காத்திருந்தது. அவரை போலீசார், கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் அவரது நீதிமன்றக் காவல் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே முஷாரப் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள், பெஷாவர் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது முஷரப் வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம் முஷர்ரப் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயுட்கால தடை விதிப்பதாக தீர்ப்பளித்தனர்.
இந்த தடையை எதிர்த்து மேன் முறையீட்டு நீதிமன்றில் மேல் முறையீடு செய்யப்போவதாக அவரது சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்..

0 comments :
Post a Comment