புத்தளம் பிரதேச சபை தவிசாளர் விபத்தில் பலி.


புத்தளம் பிரதான வீதியின், தெதுருஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் பிரதேச சபைத் தலைவர் உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்த கெப் வாகனம் இன்று அதிகாலை 2.30 அளவில் லொரியுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயங்களுக்குள்ளான கெப் வாகனத்தின் சாரதி  சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம் பிரதேச சபைத் தலைவர் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் வாகனம் விபத்துக்குள்ளானதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :