எட்னா சொக்லட்டின் கவரில் பன்றியின் உருவப் படம் பொறிக்கப்பட்டுள்ளது' என காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) வியாழக்கிழமை மாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதுடன், பன்றியின் உருவப் படம் பொறிக்கப்பட்ட எட்னா சொக்லட்டின் கவரையும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் காண்பித்துள்ளார்.
இதன் போது இந்த கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் 'முஸ்லிம்கள் எப்போதும் நாட்டின் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவே இருந்து வருகின்றனர். முஸ்லிம்கள் ஒரு போதும் நாட்டை பிரிக்க வேண்டும் என்று கூறவில்லை. அமைதியையும், சமாதானத்தையுமே முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.
ஆனால், அன்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக இடம் பெற்றுவரும் பல்வேறு சம்பவங்கள், முஸ்லிம்களின் உள்ளங்களை பாதிக்க வைத்துள்ளதுடன், முஸ்லிம்களை அச்சமடையவும் செய்துள்ளன. அதனால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. முஸ்லிம்களின் உள்ளங்களை புண்படுத்துமளவுக்கு சில பொருட்களில் பன்றியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு வேதனையை தருகின்றது.
முஸ்லிம்கள் தமது சமய கலாசார நடவடிக்கைளில் ஈடுபடும் போது, அதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. முஸ்லிம்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும்' என அவர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.ZN

0 comments :
Post a Comment