வெளிநாடுகளில் கஷ்டப்படும் பணியாளர்களை அழைத்துவராமல் களியாட்டம் நடக்கிறது -அஜித்


வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வினைக் காணாமல் அரசாங்கம் களியாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் P. பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

'வெளிநாடுகளிலுள்ள பணியாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். இரண்டு மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

சவுதி அரேபியாவின் ஜித்தாவில் அசௌகரியங்களுக்குள்ளான இலங்கையர்கள் குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்படுகின்றது.

அரசாங்கம் நாம் தெரிவிப்பதைக் கருத்தில் கொள்ளுமாயின் விசேட விமானமொன்றை அனுப்பி நாளை அல்லது நாளை மறுதினம் அவர்களை அழைத்து வர வேண்டும்.

தற்காலிக விமான அனுமதிப் பத்திரத்தை தயாரிக்க சில நிமிடங்களே தேவை. ஒரு பக்க ஆவணமே அது. 765 பேரையும் நாளை மறுதினமே அழைத்துவர முடியும்.

முகவர் நிலையங்கள் மீண்டும் இவர்களை ஒப்பந்த அடிப்படையில் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும். வெளிநாட்டிலுள்ள எமது பணியாளர்கள் முகவர் நிலையங்களிலுள்ளவர்களிடமும் அடிவாங்குகின்ற
னர்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் களியாட்ட நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்,' என்றார் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் P. பெரேரா.N1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :