முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் புதல்வர் விமுக்தி விஜய குமாரதுங்க அரசிலலுக்குள்.


(அஸ்ரப் ஏ.சமத்)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மற்றும் பிரபல நடிகர் காலம்சென்ற விஜய குமாரதுங்க ஆகியோரின் ஒரே ஒரு புதல்வர் விமுக்தி விஜய குமாரதுங்க (மிருக வைத்தியர்) புதிய அரசியலிலொன்றில் குதிக்க உள்ளார்.

விமுக்தி விஜய குமாரதுங்க தனது அம்மாவின் அரசியலுக்கு உதவிபுரியும் பொருட்டு லண்டன் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
மேற்படி புதிய அரசியல் யுகமொன்றை உருவாக்குவதற்காக நாடு முழுவதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க பல்வேறு கூட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பின்னால் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் விஜய குமாரதுங்கவின் மகஜன கட்சி, ஜ.தே.கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளில் இருந்து சில அரசியல்வாதிகள் சந்திரிகாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.MP
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :