தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை காணச் செல்லும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்.பொலிஸ்மா அதிபர்

அம்பாறையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை காண வரும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்துள்ளார். 

இன்று (27) விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை காணச் செல்லும் முஸ்லிம்களை ஒரு குழு அச்சுறுத்தி வருவதாகவும் அது குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

எனினும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இடம்பெறும் பூமியில் பொலிஸ் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதென பொலிஸ் மா அதிபர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

எனவே அச்சமின்றி தேசத்திற்கு மகுடம் காண வருமாறு அவர் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :