(எம்.பைஷல் இஸ்மாயில்)
சம்மாந்துறையில் 110 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நெல் ஆராய்ச்சி நிலையத்தை விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் பி.தயாரத்ன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் சம்மாந்துறை பிரதேச செயலாளர் மன்சூர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

.jpg)



0 comments :
Post a Comment