பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை 100பேர் கொண்ட குண்டர்களால் தாக்குதலுக்குள்ளானது சற்றுமுன்னர்.


பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இன்றிரவு 8 மணியளவில் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

கற்களை வீசியும் வேறு ஆயுதங்களாலும் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இத் தாக்குதல் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 100 பேர் கொண்ட குண்டர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிசார் தற்போது நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இதன் போது அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாகட்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :