சர்வோதய அமைப்பின் கல்முனை அலுவலகத்தினால் அட்டாளைச்சேனை கோணாவத்தை அல் ஹூதா முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு விளையாட்டுப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு


(எஸ்எம்.அறூஸ், எம்.ஐ.எம்.பைஸல்)

சர்வோதய அமைப்பின் கல்முனை அலுவலகத்தினால் அட்டாளைச்சேனை கோணாவத்தை அல் ஹூதா முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு ஒரு தொகுதி விளையாட்டுப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை (2013.02.26) முகாமைத்துவ பணிப்பாளர் எம்.நௌசாத் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வுக்கு வருகை தந்த சர்வோதய அமைப்பின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் எம்.எல்.எம்.பாரிஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் மாலை அணிவித்து சிறுவர்களினால் மலர் தூவி வரவேற்கப்பட்டனர்.

இவ் விளையாட்டுப் பொருட்களை அமைப்பின் உறுப்பினர்களிடம் சர்வோதய இணைப்பாளர் எம்.எல்.எம்.பாரிஸ், நுஜா ஊடக அமைப்பின் தலைவர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ், பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர். நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
 









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :