சிறுமியை நகைக்காக கற்பழித்து கொலை செய்த இரண்டு பேருக்கு மரணதண்டனை


 கேரள மாநிலம் வயநாடு கல்பட்டாவை சேர்ந்த அனிதா என்பவர் கடந்த 2011ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவி அனிதா பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த நாகர்இ கபீர் என்ற 2 வாலிபர்கள் மாணவி அனிதாவை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கல்பட்டா பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கல்பட்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த பொலிசார்இ நாசர்இ அப்துல் கபூர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இக்கொலை வழக்கில் 2 வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 பேரும் செய்த தவறு மிகவும் கொடூரமானது. நகைக்காக இளம்பெண்ணை கொலை செய்தது மன்னிக்க முடியாத ஒன்று. இவர்களால் இந்த நாட்டிற்கு ஆபத்து.
இதனால் 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கிறேன் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :