வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின் போது (1971) அவர் செய்ததாகக் கூறப்படும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு இந்தத்தண்டனை வழங்கப்பட்டது.
மனிதப் படுகொலை, சித்ரவதைகள் ஆகியவைகள் உட்பட பல குற்றங்களுக்காக ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் உபதலைவரான டெல்வார் ஹொசைன் சைதீ அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் என்று விமர்சகர்களால் கூறப்படும் இந்த விசாரணை மன்றத்தின் மூலம் ஒரு மூத்த தலைவருக்கு வழங்கப்பட்ட மிகக்கூடிய தண்டனை இதுவாகும்.
இந்த வழக்குக்கு எதிராக பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜமாத் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த மோதல்களில் பலர் காயமடைந்தனர். (பி.பி.சி )
.பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின் போது (1971) அவர் செய்ததாகக் கூறப்படும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு இந்தத்தண்டனை வழங்கப்பட்டது.
மனிதப் படுகொலை, சித்ரவதைகள் ஆகியவைகள் உட்பட பல குற்றங்களுக்காக ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் உபதலைவரான டெல்வார் ஹொசைன் சைதீ அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் என்று விமர்சகர்களால் கூறப்படும் இந்த விசாரணை மன்றத்தின் மூலம் ஒரு மூத்த தலைவருக்கு வழங்கப்பட்ட மிகக்கூடிய தண்டனை இதுவாகும்.
இந்த வழக்குக்கு எதிராக பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜமாத் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த மோதல்களில் பலர் காயமடைந்தனர். (பி.பி.சி )
0 comments :
Post a Comment