எஸ்.எல்.மன்சூர்.
சூரியன் உதிக்கின்றதோ இல்லையோ ஒவ்வொரு நாளும் புதிய படைப்புக்களாக நூல்கள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன. 'கொலம்பஸ் ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடித்தான் என்பதற்காக அவனை நான் புகழவில்லை. ஆனால் தன்னுடைய கருத்தின்மீது நம்பிக்கை வைத்து ஒரு கண்டுபிடிப்பில் முயற்சித்தானே அதற்காக அவனைப் பாராட்டுகின்றேன்' என்று அறிஞர் டர்காட் என்பவர் கூறுகின்றார். அதேபோன்று ஒரு புதிய நூலை வெளியிட்டிருக்கின்;;;;றார் என்பதற்காக அவரைப் பாராட்டவில்லை. வாசகர்களின் அறிவுப்பசியை தீர்க்க புத்தம் புதுவடிவில் ஒரு தேடல் பொக்கிஷத்தை தமிழ்பேசும் சமுதாயத்திற்கு வெளிக்கொணர்ந்தமைக்காக அன்புத் தம்பி எம்.எஸ்.எம். சாஜஹான் ஐ பாராட்டுகின்றேன்.
அண்மைக்கால தகவல்கள், சகலவிதமான போட்டி பரீட்சைகளுக்குமான தகவல்கள், சர்வதேச தினங்கள், நாடுகள் பற்றிய தகவல்கள், முக்கியமான சர்வதேச அமைப்புக்கள், விளையாட்டுத் தகவல்கள், இலங்கை பற்றிய முக்கிய விடயங்கள், தகவல் துளிகள், நவீன உலகின் அதிசயங்கள், கண்டுபிடிப்புக்களும், கண்டுபிடிப்பாளர்களும் என்று 10 பெரிய தலைப்புக்களில் யாத்துள்ள இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார் தென்கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்த கலாநிதி. எஸ்எம்.எம்.இஸ்மாயில் அவர்களாவார். அவர்தனது அணிந்துரையில் 'இந்நூல் ஒரு இளநிலைப் பட்டதாரி மாணவரின் கன்னி முயற்சி. இவரின் சமூக அக்கரையை இந்நூல் வெளிப்படுத்துகின்றது'என்று கூறுகின்றார். நூலாசிரியர் எம்.எஸ்.எம். சாஜஹான் தன்னுடைய முன்னுரையில் 'தான் சிறுபராய முதல் பொதுஅறிவு விடயங்களில் அளவு கடந்த நாட்டம் இருந்தது. பொது அறிவு தொடர்பான தேடல்களை அதிகரித்தபோது அதனை ஏனையோரும் பயன்படுத்தும் நோக்கில் நூலுருவாக்கம் செய்துள்ளேன். இதற்குதவிய அனைத்துள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறுகின்றார் நூலாசிரியர்.
கலாநிதி குணபாலன் இந்நூல்பற்றி குறிப்;பிடுகையில் 'நல்ல மாணவன் ஒருவனின் நல்லதோர் ஒரு தேடல்'என்கிறார். தென்கிழக்குப் பல்கலைக் கழத்தில் பட்டதாரியாக கல்வி பயிலும் நூலாசியரின் முயற்சிக்கு ஒரு சபாஷ். இளம் வயதில் இவ்வாறான ஒரு முயற்சியில் களமிறங்கியுள்ள இம்மாணவனின் தேடல்கள் எதிர்காலத்தில் மேலும் பல தொகுப்புக்களை தமிழ்பேசும் சமூகத்திற்கு அளிப்பார் என்கிற நம்பிக்கை இவரது பேச்சில் இளையோடுகிறது. நல்லதோர் தேடல், சிறப்பானதோர் தொகுப்பு, அனைவரையும் வாசிக்கத் தூண்டும் பொதுவான அம்சங்கள். பொது அறிவுப் பரீட்சைக்குத் தோற்றும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷம். மொத்தத்தில் அனைவருக்குமே அறிவுப் பசியை போக்கிட உதவும் ஒரு ஒளடதம் என்றால் அது மிகையாகாது. கையடக்கமான இந்நூல் அறிவுலகில் நல்ல விலைபேசும் என்பதே என்றே கூறலாம்.
0 comments :
Post a Comment