ஸ்ரீலங்கா முஸ்லிம் உலமா கட்சியின் அதியுயர் பீட கூட்டம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போதே பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 16.07.2012 அன்று தேர்தல் ஆணையாளருடனான தமது கட்சியினரின் சந்திப்பின் போது உலமா கட்சியின் பெயரில் உள்ள உலமா என்பது சமயத்தின் சின்னமாக கருதப்படுகின்றது.இந்த பெயரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் உலமா கட்சியை பதிவு செய்யும் பட்சத்தில் ஏனைய சமய பெயரிலான கட்சிகளையும் பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
பெயர் மாற்றம் பெறும்போது பல வருடங்களாக அரசியல் களத்தில் நன்கு அறிமுகமுள்ள இந்த கட்சியை பதிவு செய்வதில் எத்தகைய தடையும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.பொதுவாக இனம், சமய ரீதியாக கட்சிகளை பதிவு செய்வது தடைசெய்யப்படவில்லை என்பதால் இதற்காக போராடுவது என்ற தமது உறுதியின் காரணமாக பலமுறை தேர்தல் ஆணையாளருடன் பல சந்திப்புக்களை நடத்தியுள்ளோம்.
இருந்த போதும் தற்போதைய தேர்தல் ஆணையாளர் மனச்சாட்சிப்படி செயலாற்றும் சிறந்த ஒருவர் என்பதனால் அவரது அன்பான வேண்டுகோளுக்கு எமது கட்சி மதிப்பளிக்கிறது.இதன் காரணமாக பல தடவைகள் எமது கட்சியின் உயர் சபை ஆராய்ந்த பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி என பெயரை மாற்றுவது என்றும் ஸ்ரீலங்கா உலமா கவுன்சில் தொடர்ந்தும் சமூகநலன் சார்ந்த அமைப்பாக செயற்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment