மட்டக்களப்பு ஏறாவூர் நீதிமன்ற கட்டத்தின் திருத்ததிற்காக 9 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கி உடனடியாக ஏறாவூர் 5 தமிழ் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தினை மக்களின் பாவனைக்குக் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.கருணாகரம் (ஜனா) இன்று புதன்கிழமை காலை கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் இந்த உறுதியை வழங்கியிருக்கிறார்.
ஏறாவூர் – 5 தமிழ் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் சமுர்த்தி அலுவலகங்கள் இயங்கி வந்திருந்தன.
நீதிமன்றக் கட்டடம் உடைந்த நிலையில் உள்ளதனால் ஏறாவூர் நீதிமன்றம் ஏறாவூர் 5 தமிழ் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். அதனால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு நீதி அமைச்சரிடம் கோரியதற்கமைய அமைச்சர் உடனடியானக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஜனா தெரிவித்தார்..

0 comments :
Post a Comment