கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வும் பொதுக்கூட்டமும்- இருகட்சிகளின் உறுப்பினர்களின் ஒற்றுமையும்.

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வும் பொதுக்கூட்டமும் இன்று (27.02.2013) நடைபெற்றது.
இவ்வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடற்கரை பள்ளி வீதியின் பிரதான வீதிச் சந்தியிலும் பொதுக்கூட்டம் அல்-பஹ்றியா மாகாவித்தியாலய மண்டபத்திலும் நடைபெற்றது.

கடற்கரைப் பள்ளி வீதியானது 39 மில்லியன் ரூபா செலவில் இருமருங்கிலும் வடிகான் அமைத்து கொங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிழக்குமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்இ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எ.பறகத்துள்ளா ஆகியோர் கலந்து கொண்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :