SLMC in அட்டாளைச்சேனை அமைப்பாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் -ஏ.எல்.எம்.நஸீர்


















(எஸ்.எம்.அறூஸ்)



முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் மற்றும் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி ஆகியோர்களது கையொப்பத்துடன் இக்கடிதம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

மிகக் குறுகிய காலத்திற்குள் அரசியலுக்குள் பிரவேசித்து அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகவும் பின்னர் மாகாண சபை உறுப்பினராகவும் ஏ.எல்.எம்.நஸீர் கூடுதலான மக்கள் ஆதரவைப் பெற்று தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட ரீதியிலான தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பமாகவும் நஸீரின் வெற்றி கருதப்படுகின்றது.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் தெரிவு நான்கு உறுப்பினர்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஸீரும் ஒருவராவார். மக்களோடு மக்களாக இருந்து அரசியல் செய்து கொண்டிருக்கம் இவர் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் 32 ஆண்டுகளாக வரட்சியாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வென்றடுக்க வேண்டும் என்பதே மக்களின் அசையாத விருப்பமாக இருக்கின்றது.

அட்டாளைச்Nனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டதற்கு கட்சி ஆதரவாளர்கள், பொது அமைப்புக்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன் இந்நியமனத்தை வழங்கிய கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோர்களுக்கு நன்றியறிதழையும் தெரிவித்துள்ளனர்.

அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.நஸீர்;, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுக்களை புணரமைத்து கட்சியின் கட்டமைப்பினை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :