முடக்கு வாதம் என்றால் என்ன?
உடலிலுள்ள சிறிய, பெரிய மூட்டுக்களைப்; பாதித்து மீண்டும் மீண்டும் வீக்கத்தையும் நோவையும் விற்றைப்பையும் ஏற்படுத்தும் ஒரு நீண்ட கால நோயாகும். மூட்டுக்களின் வீக்கம், நோவு, நிறமாற்றம், வேலை நிகழாமை என்பன இந்த நோயினால் ஏற்படும்.
எப்படிப் பட்ட மக்களுக்கு இந்த நோய் வரக் கூடும்?
நடுத்தர வயதுள்ள பெண்களுக்கே ஆண்களிலும் பார்க்க பொதுவாக இந்த நோய் ஏற்படுகின்றது. பிள்ளைகளை மிகவும் அரிதாகவே இந் நோய் தாக்கும். பரம்பரையாக ஒரு குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்திற்கு மிக அரிதாகவே கடத்தப்படலாம். அதாவது உங்கள் பிள்ளைகளுக்கு இந்த நோய் வர வாய்ப்பு குறைவு. உங்கள் வாழ்க்கைத் துணைக்கோ அல்லது உங்களுடன் சம்பந்தப்பட்ட வேறு எவருக்கும் இது தொற்ற மாட்டாது.
முடக்கு வாதம் எதனால் உண்டாகிறது?
சரியான காரணம் தெரியாது. சரீரத்திலுள்ள ஏதோ ஒரு எதிர்ப்புச் சக்தியின் குறைபாடாக இருக்கலாம். என்று நம்பப்படுகிறது. வாதமும் முடக்கு வாதமும் ஒன்று? இல்லை. வாத சுரமானது பிள்ளைகளிலும் இளம் வாலிபர்களிலும் காணப்படும் வேறொரு நோயாகும். அவர்களுடைய இருதயமும் மூட்டுக்களும் பாதிக்கப்படுகின்றன.
முடக்கு வாதம் உள்ள மக்களுக்கு ஏன் மூட்டு உருக்குலைவு ஏற்படுகிறது?
நாடா போன்ற அநேக இழயங்களே மூட்டுகளை நிலையாக வைத்திருக்கின்றன. முடக்கு வாத நோயினை இதன் கீழே கூறப்படும் பராமரிப்பு முறையினால் தடுத்துக் கொள்ளலாம்.
1. ஒரு மூட்டிலே அதிக நோவு உண்டானால் இந்த மூட்டுக்கு கட்டாய இளைப்பாறுதல் கொடுத்தல்; அவசியம். முழங்கால் அல்லது முழங்கையடியாயிருந்தால் அதை அசைக்காது கட்டிலில் போட்டு வைப்பது மூட்டுக்கு கூடுதலான ஆறுதலைக் கொடுக்கும்.
2. கடுமையான நோவு 1, 2, நாட்களில் குறைந்ததும் (மருந்தின் உதவியுடன்) ஒரு நாளைக்கு 2, 3, முறை அந்த மூட்டை முற்றாகவோ அல்லது கூடிய அளவிற்கோ நோவு ஏற்படாதவாறு அசைக்க வேண்டும்.
3. முழங்காலின் கீழ் தலையணை வைக்க வேண்டாம். தாக்கப்படாத பாகமும் நாளைக்கு பல தடவை அசைக்கப்பட வேண்டும்.
4. இடுப்புப் பூட்டிலே தாக்கம் உண்டானால் நாள் ஒன்றுக்கு 2, 3 மணித்தியாலம் வயிற்றிலே படுத்தால் அந்த நிலையான உருக்குலைவு இடுப்புப் பூட்டிலே உண்டாவதைக் குறைக்கலாம்.
அநேக நாட்களுக்கு ஒரு மூட்டு பாவிக்கப்படாதிருந்தால் அதைச் சுற்றியுள்ள தசைகளில் தேய்வு உண்டாகும்.
முடக்கு வாதம் எப்படிப் பராமரிக்கப்படுகிறது?
இரண்டு விசேஷ முறைகள் உண்டு.
1. அப்பியாசம் 2. மருந்துகள்
அப்பியாசம் எந்த விதத்தில் உதவி செய்கிறது?
வௌ;வேறு விதமான அப்பியாசச் சிகிச்சை முறைகள் உண்டு.
வெப்ப சிகிச்சை மூலமாக அதாவது மின் கதிர் உபகரணங்கள், உருக்கப்பட்ட மெழுகுக்குள்கைகளை அமிழ்த்துவதினாலும், மின் கதிர்களை வீசும் விளக்குகளைப் பாவிப்பதினாலும், மூட்டுக்களின் நோவு, விறைப்பு என்பவற்றைக் குறைக்கலாம். மின் கதிரும் அப்பியாசமும் மூட்டுக்களின் ஆட்ட அசைவுகளுக்கு பெரிதும் உதவுகின்றன. நீங்கள் இப்படியான அப்பியாச சிகிச்சை முறை வசதிகள் உள்ள வைத்தியசாலைக்கு அண்மையில் இல்லாவிட்டால் வீட்டிலே கீழே குறிப்பிடப்பட்டவற்றை செய்து பார்க்கலாம்.
1. ஒவ்வொரு நாளும் 2 முறை பாதிக்கப்பட்ட மூட்டுக்களுக்கு 5 நிமிடம் வரை கொதி நீர் ஒத்தணம் கொடுக்கலாம்.
2. கைவிரல்கள் பாதிக்கப்பட்டிருந்தால் விரல்களை ஒரு கோப்பை இள வென்நீரில் வைத்தபடி ஆட்டி அசைத்து 5 - 15 நிமிடங்கள் வரை அப்பியாசம் செய்யலாம்.
வாத நோயை குணம் ஆக்க என்ன மருந்துகள் உண்டு?
அஸ்பிறின், இன்டோமெதசின் இன்னும் பல மருந்துகள் மூட்டிலே உள்ள வீக்கத்தைக் குறைப்பதினால் நோவு, விறைப்புத் தன்மையை குறைக்கக் கூடும். ஆனால் இவற்றை முற்றாக குணமாக்க மாட்டாது. இந்த மருந்துகள் வயிற்றிலே எரிவை உண்டாக்கும். உணவின் பின் மருந்தை எடுப்பதனால் எரிவைக் குறைக்கலாம். சோடியம் ஓறோதியோ மலேற் (ளழனரைஅ யரசழவாழைஅயடயவந) சாதாரணமாக பென் ஊசி மருந்து என்று அறியப்படும் இது நோயின் சிறிது மாற்றத்தைக் காண்பிக்கும். இலங்கையில் சில வைத்தியசாலைகளில் கிடைக்கின்றது. பிறட்ணிசோலன் (ஸ்றிறோயிட்,(Pசநனnளைழடழநெ) வாத நோயிற்கு உதவியானதா? இந்த மருந்தை நீண்ட காலம் பாவித்தால் நீரிழிவு, இரத்த அமுக்கம் போன்ற நோய்கள் ஏற்படும். இக்காரணத்தினால் இந்த மருந்து அதிகமாக பாவிக்கப்படுவது இல்லை. வாத நோய் மிகவும் கடுமையாகக் காணப்பட்டால் மட்டுமே 7 - 10 நாட்களுக்கு இந்த மருந்தைப் பாவிப்பர். ஸ்றீறோயிட் ஊசி மருந்து மூலம் மூட்டுக்களில் கொடுக்கப்படும் போது அது நோவையும் விறைப்பையும் குறைக்கின்றது. அடிக்கடி இதைப் பாவித்தால் மூட்டுக்கும் தசை நாருக்குமே தீங்கு விளையும்.
மூட்டு வாதம் சீவிய காலம் வரை நீடிக்குமா?
இது நீண்ட கால நோய் தான். என்றாலும் மருந்தினாலும் அப்பியாசத்தினாலும் இடை இடையே ஒரு மாசமோ அல்லது வருடோமோ குறைந்திருக்கலாம். சில வேளைகளில் குறைந்திருந்த நோய் சடுதியாக நோய்க் குறிகளுடன் தோன்றவும் கூடும். அப்படியானால் தீவிரமான அப்பியாசம் செய்ய வேண்டி ஏற்படும்.
வழங்குவது:
டாக்டர் கே.எல்.நக்பர்
தொடரும்....
0 comments :
Post a Comment