சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸானாவின் குடும்பத்திற்கு அரசாங்கத்தினால் புதிய வீடொன்று நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது. இந்த வீட்டினை ஜனாதிபதி மூலம் ரிஸானாவின் பெற்றோரிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய வீட்டிற்கான அடிக்கல் நடும் வைபவம் எதிர்வரும் 18 ஆம் திகதி மூதூரில் நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மேற்கொண்டுள்ளார். நிகழ்வில் அமைச்சர் ரன்ஜித்சியம்பலாப்பிட்டியவும் கலந்துகொள்ளவுள்ளார்.
ரிஸானாவின் சகோதரிக்கும்இ சகோதரனுக்கும் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குடும்பத்திற்கு தேவையான ஏனைய வசதிகளும் வழங்கப்படுமெனவும் நஜீப் ஏ. மஜீத் கேசரிக்குத் தெரிவித்தார்.
.

0 comments :
Post a Comment