(எஸ்.எல். மன்சூர்)
அட்டாளைச்சேனையின் கல்விமானுக்கு மரணித்தபின்னரும் கௌரவம்
ஒரு கல்விமான் தடம்பதித்த சில நினைவுகள் எனும் சிறு ஞாபகார்த்த கையேட்டின் ஊடாக தனது சகோதரனுக்கு இப்படியொரு கொளரவத்தை வழங்கியுள்ளார் அட்டாளைச்சேனை லங்கா மெடிக்கல் உரிமையாளரும், அட்டாளைச்சேனையின் முதல் ஆண் தாதியும், கொடைவள்ளளுமான அல்ஹாஜ். எம்.ஏ.எம். சுபைதீன்(ஜேபி)அவர்கள்.
உலகவாழ்விலும், மரணித்த பின்னரும் ஒருவரது நல்ல விடயங்கள் பற்றி பேசப்படுகின்றபோது அவரது ஆத்மாவுக்கு பலன் கிடைக்கும் என்கிற நன்நோக்கில் தான் வாழ்ந்த காலத்தில் செய்த சேவைகளும், மறக்கமுடியாத நிகழ்வுகளையும் ஞாபமூட்டும் எண்ணத்துடன் வெளியிடப்பட்டுள்ள கையேடு அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் அல்ஹாபிஸ். என்.எம். அப்துல்லா அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்தக் கொளரவத்திற்குரிய கல்விமான் தென்கிழக்கின் முதல் விஞ்ஞானப் பட்டதாரியான மர்ஹூம். அல்ஹாஜ். எம்.ஏ. சம்சுதீன் அவர்கள். மரணித்து நாற்பதாவது நாளில் இவரது கடந்த வாழ்வின் சாதனைகள் அடங்கிய விடயங்களைப் கோவைப்படுத்தி நூலுருப்படுத்தியுள்ளார் மரணித்தவரின் தம்பியான எம்.ஏ.எம். சுபைதீன் அவர்கள். இவரது நல்லநோக்கம் ஈடேற்றம் பெற எல்லாம் வல்ல இறைவனைத் துதித்துடுவோம்.


0 comments :
Post a Comment