கிழக்கு மாகாண விவசாய கால்நடை மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் வாகனம் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்டின் வாகனம் தீக்கிரையானமை தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியிலுள்ள குள்ளியத்து தாரிம் உலும் அரபுக் கல்லூரியில் இவ்வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது இனந்தெரியாதோரினால் சனிக்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எல்.எம்.நயீம் தெரிவிக்கையில்,
'ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் குள்ளியத்து தாரிம் உலும் அரபுக் கல்லூரியையும் காண்பித்து இவைகளின் அபிவிருத்தி பற்றி சவூதி இளவரசி ஆதீலாவின் செயலாளர் எஹ்யா அப்துல் அசீஸ் அல்றாசீத்துடனும் இலங்கை ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான அப்துல் கபூர் மசூத் மௌலான உள்ளிட்ட குழுவினருடனும் சனிக்கிழமை கிழக்கு மாகாண விவசாய கால்நடை மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதன் பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், தீக்கிரையாக்கப்பட்ட வாகனத்திற்கு அருகிலிருந்த முச்சக்கரவண்டியொன்றும் தீக்கிரையாகியுள்ளது.
மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் நிலைமையை நேரில் வந்து பார்வையிட்டதுடன், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்' எனக் கூறினார்..jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment