(எம்.பைஷல் இஸ்மாயில்)
அம்பாறை மாவட்ட பொத்துவில், கல்முனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குற்பட்ட பகுதியில் ட்ரூவிஷன் அமைப்பு பல செயற்திட்ட பயிற்சி நெறிகளையும், அவை தொடர்பான உபகரணங்களையும் நடாத்தியும், வழங்கியும் வருகின்றது.
அந்த வகையில் ட்ரூவிஷன் அமைப்பினால் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டவைகள் வருமாறு;
ட்ரூவிஷன் அமைப்பின் அணுசரனையில் அட்டாளைச்சேனை பிரதேச சிறுவர் பாதுகாப்பு மற்றும் பரிந்துரைத்தல் குழுவின் உறுப்பினர்களுக்கான செயற்திறன் விருத்தி பயிற்சி நெறியை அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்திலும், தேசிய சமாதானப் பேரவையின் அணுசரனையின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட சிறுவர் கழகங்களின் தலைவர்களுக்கான தொடர் திறன் விருத்தி பயிற்சிக் கருத்தரங்கினை அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்திலும், மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின் அணுசரனையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லினக்க ஆணைக் குழுவின் விதப்புரைகளை மக்களுக்கு தெளிவு படுத்தும் நிகழ்வு கல்முனைப் பிரதேச துறை நீலாவனை தமிழ் இளைஞர், யுவதிகளுக்கான கருத்தரங்கை துறை நீலாவனை பல்தேவைக் கட்டிடத்திலும் இப்பயிற்சி நெறி பட்டறைகள் இடம்பெற்றன.
இப்பயிற்சி நெறிகள் யாவும் ட்ரூவிஷன் அமைப்பின் தலைவர், சட்டத்தரணி உவைஸ் அப்துல் காதர் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச சிறுவர் பாதுகாப்பு மற்றும் பரிந்துரைத்தல் குழுவின் பயிற்சி நெறியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியப் பரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஜே.நௌபலும், சிறுவர் கழகங்களின் தலைவர்களுக்கான தொடர் திறன் விருத்தி பயிற்சிக் கருத்தரங்கினை ஆசிரியர் உவைஸ் மற்றும் மௌலவியும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லினக்க ஆணைக் குழுவின் விதப்புரைகளை ட்ரூவிஷன் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் றசாத் அஹமட், செயற்திட்ட உத்தியோகத்தர் எஸ்.கினிசாத் ஆகியோர்களால் நடாத்தி வைக்கப்பட்டது.
இந்த செயற்திறன் விருத்தி பயிற்சி நெறிக்கு அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், ஆலங்குளம், திராய்க்கேணி ஆகிய பிரதேசங்களிலுள்ளவர்களும், கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகப் பரிவுக்குற்பட்ட துறை நீலாவனை பிரதேசத்திலுள்ளவர்களும், பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குற்பட்ட ஹிதாயபுரத்திலுள்ளவர்களும் பங்கெற்றிருந்தனர்.
இதேவேளை ட்ரூவிஷன் அமைப்பு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவியுடன் பொத்துவில் ஹிதாயபுரம் பிரதேசத்தில் செயற்படுத்தி வரும் வளங்களின் நிலைபேண் தன்மையை மேம்படுத்தும் செயற்திட்டத்திற்கிணங்க வீட்டுத் தோட்டங்களை அமைப்பதற்கான பயிற்சியுடன் விதைகள், மரக்கன்றுகள் மற்றும் வீட்டுத் தோட்ட உபகரணங்களையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வீட்டுத் தோட்டங்களை அமைப்பதற்கான பயிற்சி விதைகள், மரக்கன்று மற்றும் வீட்டுத் தோட்ட உபகரணங்களை ட்ரூவிஷன் அமைப்பின் செயற்திட்ட முகாமையாளர் முஹம்மட் சியாத் மற்றும் இணைப்பாளர் எம்.ஐ.எம்.றஊப் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment