அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிறப்பாக இயங்கிவரும் அக்கரைப்பற்று-06 கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழுவுக்கு அனர்த்த வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்கு அவசியமான ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான கருவிகள் 20.01.2013ம் திகதி வழங்கப்படவுள்ளது.
அன்றைய தினத்தில் அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்களுக்கு குடி நீரும் சுகாதாரமும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சியும் கெயார் நிறுவனத்தினால் கிராம உத்தியோகத்தர் எஸ்.ரி.எம்.றிஜான் தலைமையில் நடாத்தப்படவுள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் கி.அ.மு.குழு செயலாளருமான சாமஸ்ரீ தேசமானி என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி தெரிவித்துள்ளார்.
.

0 comments :
Post a Comment