அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் விளையாட்டுப் பிரிவினரால் மாபெரும் றக்பி உதைப்பந்தாட்ட கண்காட்சி

Share on

 (எம்.ஐ.முஹம்மட் பைஷல், எஸ்.எம்.அறூஸ்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் விளையாட்டுப் பிரிவினரால் மாபெரும் றக்பி உதைப்பந்தாட்ட கண்காட்சி நேற்று (03.12.2012) பாலமுனை மின்ஹாஜ் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த றக்பி விளையாட்டுப் போட்டிக்கு அக்கரைப்பற்று வலயத்திலுள்ள 11 பாடசாலைகளிலிருந்து 12 வயதிற்குட்பட்ட 226 மாணவர்கள் பங்குபற்றி இவ்விளையாட்டுப் போட்டி நடைபெற்றன. 

கல்வி வலயத்தின் விளையாட்டுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமில் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் அஷ்சேஹ் ஏ.எல்.எம்.காசீம் கலந்து கொண்டு 11 பாடசாலைகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட றக்பி விளையாட்டுக் குழுவினருக்கு சான்றிதழ்களும், றக்பி விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வுக்கு ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், மீலாத்நகர் அல் - ஜெஸீறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், பாலமுனை அல் - இப்னு ஸீனா வித்தியாலய அதிபர் கே.ஹமாமுதீன், விளையாட்டு ஆசிரியர் ஐ.எல்.எம்.பாயிஸ் மற்றும் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அகில இலங்கை பாடசாலைகளுக்கான றக்பி உதைப்பந்தாட்ட சம்மேளன உதவியாளர் கருணாரத்ன மற்றும் கடற்படை லெப்டினல் சுகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :