Share on
தம்புள்ளை நகரில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்திப் பணிகளின்பொருட்டு தம்புள்ளை பள்ளிவாசலைச் சூழவுள்ள சுமார் 50 வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை நகர அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
தம்புள்ளை நகரில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்திப் பணிகளின்பொருட்டு தம்புள்ளை பள்ளிவாசலைச் சூழவுள்ள சுமார் 50 வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை நகர அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
இதன்பொருட்டு குறித்த வீடுகள் கடைகள் மற்றும் பள்ளிவாசலுக்கு இலக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பகமுன எனும் இடத்தில் இவர்களுக்கு மாற்றிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டுள்ளதாகவும் அதன்பொருட்டு குறித்த காணிகள் துப்புரவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
65 அடி அகலமான பாதையை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதால் இப் பாதை பள்ளிவாசலை ஊடறுத்தே செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வீடுகள் மற்றும் கடைகளோடு இணைந்ததாக பள்ளிவாசலுக்கும் 17 ஆம் இலக்கம் குறிக்கப்பட்டுள்ளதாகவும் இது பள்ளிவாசல் அகற்றப்படும் என்பதற்கான அறிகுறியே எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தாம் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை பல முறை தொடர்புகொண்ட போதிலும் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக பள்ளிவாசல் நிர்வாக சபையின் உறுப்பினர் எம்.ஹாரிஸ் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இதேவேளை தம்புள்ளை பள்ளிவாசலானது பாதை அபிவிருத்தி என்ற போர்வையில் காவு கொள்ளப்படப்போகிறது என்ற கவலை மற்றும் பள்ளிவாசலின் நிச்சயமற்ற தன்மை என்பன தம்புள்ளை முஸ்லிம்களை துயரத்தில் ஆழத்தியுள்ளது என அண்மையில் விடிவெள்ளிக்கு அளித்த நேர்காணலில் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் சட்டத்தரணி அமானுல்லா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment