அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக கல்முனை பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்திற்கும் பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இன்று திடீரென பெய்த அடை மழை காரணமாக பலத்த வெள்ளம் ஏற்பட்டதுடன் கல்முனைப்பிரதேச பிரதான வீதி எங்கும் மழைக்காடாக காட்சியளித்தது.
கல்முனைப் பிரதேச வீடுகளில் வெள்ளம் உட்புகுந்துள்ளதடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதனால் நாளாந்த வேலைகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கல்முனை கரையோரப் பிரதேசங்களில் உள்ள உள்ளுர் வீதிகளில் நீர்தேங்கி நிற்பதுடன், வயல் நிலங்கள், தாழ்நிலப் பிரதேசங்களில் பெருவெள்ளம் காணப்படுகிறது. கடலும் வழமைக்கு மாற்றமாக கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்றொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment