சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.பளுள்ளாஹின் மறைவுக்கு நுஜா ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச்செய்தி..

Share on


( எம்.ஐ.முஹம்மட் பைஷல் )

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் மக்களின் இன்ப, துன்ப துயரங்களை இலங்கைக்கு மட்டுமல்லாது முழு உலகத்துக்கும் அறியச்செய்த ஒரு சிறந்த ஊடகவியலாளரை மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்ல முழு தமிழ், முஸ்லிம் மக்களும் இழந்து விட்டதாக  தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தேசிய ஐக்கிய  ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 

மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள எமது சகோதரரான சிரேஷ்ட ஊடகவியலாளரான ஏ.எல்.எம்.பளுள்ளாஹின் மறைவுச்செய்திகேட்டு ஆழ்ந்த கவலையடைந்தோம். 

சிறந்த பண்பாளனாகவும் சிறந்த ஊடகவியலாளராகவும் சமூகத்துக்கு அளப்பரிய பணியை ஆற்றிய ஒரு மனிதராகவும், மற்றவர்களின் மனங்களை நன்கறிந்து அவர்களின் மனங்கள் புன்படாமல் நடந்துகொள்ளும் நல்ல பண்பாளனாகவும் சிறந்த ஊடகவியலாளர் என்ற நற்பெருமையை பெற்ற மர்ஹூம் ஏ.எல்.எம்.பளுள்ளாஹ் அவரின் மறைவு எமக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் ஒரு பாரிய இழப்பாகும். 

ஒரு ஊடகவியலாளன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகவும் ஒரு உதாரணமாகவும் சிறந்து விளங்கி ஊடக தர்மத்தை கைக்கொள்பவராகவும் அவர் இருந்துவந்துள்ளார். 

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையின்போது தனது ஊடகப்பணியினை கத்திமுனையின் மேல் நின்று அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பால் அவர் ஆற்றிய சேவையினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்றும் மறக்கமுடியாததும், மறைக்க முடியாததுமாக அமையந்துள்ளன. 

இவ்வாறான ஒரு சிறந்த ஊடகப்பண்பாளனை இன்று நாங்கள் இழந்திருக்கின்றோம். ஊடக துறைக்கு அப்பால் இலங்கை போக்குவரத்து சபையில் இருந்து அளப்பரிய பணிகளையும் மக்களுக்கு ஆற்றிவந்துள்ளார். இவ்வாறான வேளையில் அவரின் மறைவையொட்டி ஆழ்ந்த துன்பமடைந்துள்ள அன்னாரின் குடும்பத்தினருக்கு அம்பாறை மாவட்ட தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது. 

அன்னாரின் ஆத்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் என்றும், இதேவேளை சிரேஸ்ட ஊடகவியலாளரின் ஜனாசாவுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் தங்களின் அனுதாபங்களை தெரிவித்தனர் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :