Share on
சீனாவில் பல்கலைகழக ஆசிரியர் ஒருவர், 30 இயந்திர துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவின் நான்ஜிங் பல்கலைகழகத்தின் அறிவியல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் வூ.
இவர் கடந்த வாரம் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். 30 துப்பாக்கிகளுடன் இவர் வகுப்பறைக்கு வந்ததை கண்ட மாணவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
ஆயுதம் குறித்த வகுப்பு என்பதால், மாணவர்களுக்கு நேரிடை பயிற்சி அளிப்பதற்காக இவர் துப்பாக்கிகளை எடுத்து வந்துள்ளார். இந்த துப்பாக்கிகளை மாணவர்கள் தனி தனியாக கழற்றி மீண்டும் ஒன்று சேர்த்தனர்.
இது குறித்து பல்கலை கழக நிர்வாகிகள் குறிப்பிடுகையில், பொலிசாரின் அனுமதியுடன் தான், இந்த துப்பாக்கிகள் வகுப்பறைக்கு எடுத்து வரப்பட்டன.
வகுப்பறைக்கு வெளியே இந்த துப்பாக்கிகளை பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை. தீவிர கண்காணிப்புடன் தான் இந்த வகுப்பு நடத்தப்பட்டது என்றனர்.

0 comments :
Post a Comment