(எம்.பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ்)
புற நெகும திட்டத்தின் கீழ் ஒரு கோடி 64 இலட்சம் செலவில் அட்டாளைச்சேனை பொதுச்சந்தைக்கான அடிக்கல் இடும் விழா சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தலமையில் இன்று மசூர் சின்னலெப்பை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம் நசீர்,கெளரவ அதிதிகளாக: பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், ஏ.ஜே.எம்.இர்சாத், நீதியமைச்சின் இணைப்பாளர் எஸ்.எல்.எம். பழீள், உதவிக்கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.வாஹிட், அவர்களும் பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான ஏ.எல்.அமானுள்ளா, ஐ.எல்.முனாஃப், எஸ்.எல்.முனாஸ், ஏ.எல்.சுபைடீன், டாக்டர் நக்பர், முன்னாள் சபையின் தவிசாளரும் மாகாண சபை உறுப்பினருமாகிய மர்ஹூம் மசூர் சின்னலெப்பையின் புதல்வர் றியா மசூர், சபையின் செயலாளர் ஏ.அப்து ல் சித்தீக், உள்ளூராட்சி திட்டமிடல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம். சாபிர் அவர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும், ஊழியர்களும், வர்த்தக சங்கத்தினரும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment