Share on
2012 இல் இடம்பெற்றுவரும் நிகழ்வுகளின் பின்னணியில், இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எனும் தலைப்பின் கீழ் கருத்தரங்கொன்று நாளைய தினம் (12.12.2012) தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.மீள்பார்வை ஊடக மையம் ஏற்பாடு செய்துள்ள குறித்த கருத்தரங்கு மீள்பார்வை இதழின் ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர் தலைமையில் மாலை 6.30 க்கு இடம்பெற உள்ளது.குறித்த கருத்தரங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் ,ராபிததுன் நளீமிய்யீன் பிரதித் தலைவர் மசீஹுத்தீன் இனாமுல்லாஹ்,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஷூறா சபை அங்கத்தவரான பொறியியலாளர் எம்.அப்துர்ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment