வெளிநாட்டு நாணயங்களை கடத்திய கல்முனை நபர் கைது

Share on
சுமார் 2.7 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் செல்ல முற்பட்ட கல்முனையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றுக் காலை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா நோக்கிச் செல்லவிருந்த விமானத்தில் பயணிக்கத் தயாராகவிருந்த குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை சோதனை
யிட்ட போதே காலணிகளுக்குள் மறைத்து வைத்து வெளிநாட்டு நாணயங்களை கடத்திச் செல்ல முற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. 61500 சவூதி ரியால்களும் 7000 கட்டார் ரியால்களும் 7100 டுபாய் திர்ஹம்களும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இக் குற்றத்திற்காக இவருக்கு 1 இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதாகவும் நேற்றைய தினமே அவர் குறித்த தண்டப் பணத்தைச் செலுத்திவிட்டதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :