12.12.12 ஆம் திகதி 12.12 மணிக்கு திறந்து வைக்கப்படும் மாத்தறை, ரதம்பல புதிய நகரம

Share on
புது நகர நிர்மாண திட்டத்திற்கு அமைய அமைக்கப்பட்ட மாத்தறை, ரதம்பல புது நகரம் இன்று நள்ளிரவு தாண்டி 12.12.12. ஆம் திகதி 12.12 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மிகவும் பழமையானதும் மற்றும் நீண்டகால வரலாற்றைக் கொண்டதும் பல நூற்றாண்டு காலமாக தனியாக இருந்து ஒரு நகரமான ரதம்பல நகரத்தை புதுத் திட்டங்களுக்கு அமைய புது வட
ிவில் அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர் மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி 12 ஆம் திகதி இரவு 12.12 மணிக்கு சுப நேரத்தில் நடைபெறுவதற்காக சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் அரசியல் தலைமைத்துவத்தை வகிக்கும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும அவர்களின் பூரண அனுசரனை மற்றும் பூரன கண்காணிப்பின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட ரதம்பல நகரம் சகல அடிப்படை வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

ரதம்பல நகரத்திற்கு நுழையும் சகல பாதைகளையும் காபட் இட்டு அபிவிருத்தி செய்துள்ளதோடு புது மணிக் கூட்டு கோபுரம், அழகான வாவி, புது சந்தை கட்டிடத் தொகுதி மற்றும் அரசாங்க அலுவலகங்களினால் பூர்த்தி ஆகியுள்ளது.

மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நேரடி நிதியுதவிகள் மற்றும் அமைச்சுகளின் வருடாந்த ஒதுக்கு நிதிகளை முகாமை செய்வதன் மூலம் அமைக்கப்பட்ட ரதம்பல புது நகரத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும அவர்கள் மற்றும் பாராளுமன்ற உருப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (12) இரவு 12 மணிக்கு 12 நிமிடங்கள் இருக்கும் போது அமையும் சுப நேரத்தில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :