பேஸ் புக் விவகாரம்: 80 அடி உயரத்திலிருந்து குதித்து பெண் தற்கொலை

Share on

பேஸ் புக் மூலம் சிலர் தன்னை அவமானப்படுத்தியதை தாங்கிக் கொள்ள முடியாத பிரிட்டனைச் சேர்ந்த 29 வயதான ரீமா பேகம் எனும் முஸ்லிம் யுவதி ஒருவர் 80 அடி உயரமான மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பெண் இஸ்லாமிய கலாசாரத்தை துறந்து மேற்குலக கலாசாரங்களைப் பின்பற்றி வாழ்வதாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்ததாகவும் சிலர் அவரது பேஸ் புக் பக்கத்தில் அவதூறுகளை சுமத்தியதாகவும் அவருக்கும் அவரது பெற்றோருக்கும் அவதூறான மின்னஞ்சல்களை அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்த நிலையிலேயே தற்போது தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இவர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் அவர் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டதாகவும் டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :