கலாபூசண விருதுக்கு முஸ்லிம் கலைஞர்கள் 25 பேர் தெரிவு!


தேசிய பாரம்பரியங்களை பாதுகாக்கும் பல்துறை சார்ந்த கலைஞர்களை வருடாந்தம் கலாசார மரபுரிமைகள் அமைச்சினூடாக கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
இந்நிகழ்வு தமது திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களை கௌரவிக்கும் விதத்தில் இந்த ஆண்டும் வழமை போல சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கலைஞர்கள் டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பு-07, ஜோன் டீ சில்வா மண்டபத்தில் நடைபெறுவிருக்கும் நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த வகையில் இவ்வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்வுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 25 கலைஞர்கள் விருது பெறுவதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி தெரிவிக்கின்றார்.
மேற்படி 25 கலைஞர்களும் அவர்களின் கலைத் திறமைகளை அடிப்படையாக வைத்து நிபுணத்துவம் மிக்க நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வருடம் அரசாங்கத்தால் வழங்கப்படவிருக்கும் கலாபூஷண விருது வழங்களில் சிபாரிசு செய்யப்பட்ட முஸ்லிம் கலைஞர்களின் பெயர் விபரங்கள் வருமாறு; (மெட்ரோ மிரர்)
1.   மஹ்தி ஹஸன் இப்றாஹிம் – கொழும்பு-06 (நாடகம்)
2.   இஸ்மாயில் யாசீன் வாவா – இறக்காமம்-03    (சீனடிசிலம்படி)
3.   மைமூனா செயினுலாப்தீன் – நிந்தாவூர் (இலக்கியம்)

4.   எம்.ஏ.எம்.ஏ.வாஹித் – கொழும்பு 12 (ஆக்க இலக்கியம்)

5.   யூ.எல்.எம்.முஸ்தபா – சம்மாந்துறை (நாடகம்)

6.   எஸ்.அப்துல் ஜலீல் – ஒழுவில் (ஓவியம்)

7.   எஸ்.எச்.ஆதம்பாவா – சாய்தமருது -11 (இலக்கியம்)

8.   எம்.எஸ்.மீராசாஹிபு – சாய்தமருது – 10 (கிராமிய கலை)

9.   எச். எம்.மன்சூர்  - மடவல பஸார் (ஊடகம்)

10. ஏ.எல்.ஏ.முஹம்மட் இபுறாஹிம் – காத்தான்குடி – 03 (ஓவியம்)

11. வஸீரா ஜுனைத் ஏ.அஸீஸ் – அரனாயக்க (இலக்கியம்)

12. கே.எல்.அஸனார் – சம்மாந்துறை (பொல்லடி)

13. எம்.ஜ.எம் .அப்துல் ரஊப் – அட்டாளச்சேனை (நாடகம்)

14. சி.எம்.ஏ.அமீன் – திஹாரிய   (இலக்கியம்)

15. எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் – வெலிகம (இலக்கியம்)

16. எஸ்.ஏ.மீராசாஹிபு – வாழைச்சேனை (நாடகம்)

17. எஸ்.எம்.பகீர் முஹையத்தீன் – கொலன்னாவ (நாடகம்)

18. ஜெ. ஆயிஷா ஜுனைதீன் – கொழும்பு -10 (ஊடகத்துறை)

19. எஸ்.டி.எம்.ஜ.துவஹிர் – கொடியாகும்புர (நாடகம்)

20. எம்.எல்.அப்துல் கபூர் – அக்கரைபத்து-10  (இசை)

21. ஏ.எம்.முஸ்தபா – ஏறாவூர் – 01 (இசை)

22. ஏ.எல்.வெள்ளத்தம்பி – பாலமுனை 10 (களிகம்பு)

23. எஸ்.எம்.தாவூது லெவ்வை – ஏறாவூர் 01  (நாடகம்)

24. எம்.எம்.அலி அக்பர் – கிண்ணியா 04 (ஆக்க இலக்கியம்)

25. எம்.எஸ்.பதூர்தீன் – கொலன்னாவ  (இலக்கியம)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :