அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் இணைந்து அபிவிருத்தித் திட்டம்

Share on
கிழக்கு மாகாண அமைச்சர்களா ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் இணைந்து – தமது அமைச்சின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்றினை நேற்று திங்கட்கிழமை நடத்தினர்.

திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,; அமைச்சுக் காரி
யாலயத்தில் மேற்படி கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில், அமைச்சர் ஹாபிஸ் நஸீரின் கீழுள்ள கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, அமைச்சர் உதுமாலெப்பையின் கீழுள்ள வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாண, கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கல் அமைச்சு ஆகியவை மூலம் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

மு.காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் – தனது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் எதிர்த்தரப்பினர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவர்களின் ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை அண்மையில் கேட்டறிந்திருந்தார். இதன்போது, தே.காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் உதுமாலெப்பையையும் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை ஆரம்பமாகக் கொண்டு, அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர் மற்றும் உதுமாலெப்பை ஆகியோர் இணைந்து தங்கள் அமைச்சின் கீழ் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை ஆராயும் முகமாக நேற்றைய கூட்டத்தினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கூட்டத்தில், கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே. பத்மநாபன், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாண, கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் மற்றும் இரண்டு அமைச்சுக்களின் கீழுள்ள திணைக்களத் தலைவர்கள் என பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :