அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் குறுக்காக வேலி

Share on



அப்ரித் அஹமட்.
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் குறுக்காக வேலி அமைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச விளையாட்டு வீரர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வேலி அமைக்கப்பட்டுள்ள காணியானது அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் அண்மையில் தனிநபர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது.
அண்மையில் நடாந்து முடிந்த கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியினை நடாத்துவதற்காகவே குறித்த காணி கொள்வனவு செய்யப்பட்டு பிரதேச சபையினால் பல இலட்சம் ரூபா செலவிட்டு மண் நிரப்பி திருத்தியமைக்கப்பட்டது.
தற்போது குறித்த காணியின் சொந்தக்காரராலே வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச சபை காணிக்குறிய பணத்தை குறிப்பிட்ட தினத்தில் வழங்க மறுத்தமையினாலே வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே சம்மந்தப்பட்ட காணி உரிமையாளருக்குரிய பணத்தினை வழங்கி காணியை பெற்று மைதானத்தை அபிவிருத்தி செய்ய அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்வர வேண்டும் என அப்பிரதேச விளையாட்டுக் கழகங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :